குழந்தை வரம்
குழந்தை இல்லாமல் சிலர்.😞 குழந்தை இருந்தும் அடுத்த குழந்தைக்காக ஏங்கும் சிலர். யோசிக்காமல் நிறைய பெற்று விட்டோமோ என்று வருந்தும் சிலர். அனைவரும் படிக்கவும்.😊👪
குழந்தைக்காக காத்திருப்பவர் என்றால் பொறுமையோடு இறைவன் மீது நம்பிக்கை கொண்டு காத்திருங்கள். இறைவன் சிக்கிரம் சிறந்ததை தருவான். எங்கள் நெருங்கிய நண்பர்கள் ஒரு தம்பதியினருக்கு திருமணம் ஆகி பத்து வருடங்களுக்கு அடுத்து இறைவன் அழகான குழந்தையை கொடுத்துள்ளான். ஆகவே #பொறுமையை கொண்டும் #பிரார்த்தனையை கொண்டும் அவனிடம் உதவி தேடுங்கள். நமக்கு எப்போது எது கிடைக்க வேண்டும் என்று அவன் நினைக்கிறானோ அப்போது அது தானாக நடக்கும். 💖
அடுத்து..
ஒரு குழந்தை போதுமா..😳
இரண்டு போதுமா...😳😳
நிறைய்ய பெற்று கொள்வோமா அல்லது நிறைய பெற்று விட்டோமே😳
என்று குழப்பத்தில் இருப்பவர் என்றால் தொடர்ந்து படியுங்கள்.😊
குழந்தை என்பது #இறைவன் கொடுக்கும் வரம். நாம் எவ்வளவு தான் முயன்றாலும் அவன் கொடுக்க நினைத்தால் மட்டுமே கிடைக்கும்.
பல குழந்தைகள் பெற்று கொள்வதால் இருக்கும் பயன்களை பற்றி கூறுகிறேன் கேளுங்கள்.
குழந்தைக்கு எப்பொழுதும் ஒரு துணை தேவை.
இப்போது பல குழந்தைகள் அம்மா எனக்கு தம்பி வேணும் பாப்பா வேணும் என்று புலம்புவதாக அநேக நண்பர்கள் கூற கேள்விப்பட்டிருக்கிறேன்.
எனக்கு என் தாயும் தந்தையும் இறந்த பின்பு ஆறுதலாய் இருப்பவர்கள் என் #அண்ணன்களும் #தங்கையும் தான்.என் திருமணம் முன்பே அம்மா இறந்து விட்டார். தாயின் இடத்தை நிரப்ப முயலும் தங்கை இருக்கிறாள். அப்பாவின் இடத்தை நிரப்ப முயலும் அண்ணன்கள். இவர்கள் இல்லை என்றால் என் கதி..?? மிகவும் தனிமையில் வாடியிருப்பேன். பெற்றோர் இறப்பிற்கு பின் தோள் கொடுப்பவர்கள் உடன் பிறந்தவர்களாக தான் இருக்க முடியும்.
பகிர்தல்.
அன்பாகட்டும்,அறிவாகட்டும், பொருளாதார ஆதவராக இருக்கட்டும், உடன் பிறந்தவர்கள் இருப்பின் தாய் தகப்பனுக்கு அடுத்து நமக்கு உதவ முன் வருவது அவர்கள் தாம்.
என் அம்மா செய்யும் சமையல் முறை எனக்கு சரியாக தெரியாது, அண்ணனிடம் கேட்டால் சரியாக சொல்லுவான். அம்மா இந்த குழம்பு இப்படி சமைப்பார்கள் என்று.
தங்கை இடம் அம்மா அப்பா கூறிய அந்த் காலத்து கதை, அவர்கள் நடைமுறை யை அவள் என்னிடம் கூறுவாள். நான் எனக்கு தாய் தந்தை பற்றி தெரிந்ததை அவளிடம் கூறுவேன்.
எனக்கு தங்கை, அண்ணண் என் கணவருக்கு அக்கா,தங்கை,தம்பி இருப்பதால் என் குழந்தைகளுக்கு #தாய் மாமாக்கள் , #சித்தி , #அத்தைகள், #சித்தப்பா என்று அனைத்து உறவு முறைகளும் இருக்கிறார்கள்.
உடன் பிறந்தவர்கள் இல்லாத இருவர் திருமணம் செய்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு தாய் மாமா உறவு என்றால் என்ன வென்று தெரியுமா ?? சித்தி பாசம் அத்தை பாசம் சித்தப்பா பாசம் கிடைக்குமா ????
ஆகவே பொருளாதார நெருக்கடி இல்லாதவர்கள், குழ்ந்தை பிறந்ததும் பார்த்துக்கொள்ள ஆதரவு இருப்பவர்கள் தாராளமாக மூன்று நான்கு குழந்தைகள் பெற்று கொள்ளுங்கள். இது என் ஆலோசனை மட்டுமே. நண்பர்களிடம் பகிர விரும்பினேன். ஆகவே இந்த பதிவு.
பி. கு : நீ ஏன் ரெண்டோட stop
பன்னிட்ட நு கேக்காதீங்க. some health issues so doctors adviced me to stop with 2. 😍
Selvarani J @
philomine_puvi
Comments
Post a Comment